[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வெஸ்ட் இண்டீஸில் போலீசிடம் சிக்கிய பாண்ட்யா!

hardik-pandya-reveals-he-was-almost-jailed-in-west-indies

கிரிக்கெட் தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த போது, அங்கு போலீசில் சிக்கிய கதையை இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.

இந்திய கிரிக்கெட் அணி, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு விளையாடச் சென்றது. அங்கு தனக்கு நேர்ந்த அனுபவத்தை டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

அவர் கூறும்போது, ‘நானும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் பொல்லார்டும் நண்பர்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் 2010 ம் ஆண்டில் இருந்து இருக்கிறார். நான் 2015-ல் இருந்து இருக்கிறேன். டிரெஸ்சிங் ரூமில் எனக்கு டிப்ஸ் வழங்குபவர் அவர்தான். இதையடுத்து நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் எனக்கு சகோதரர் போன்றவர். வெஸ்ட் இண்டீஸ் சென்றதும் அவர் என்னை தனியாக விடவில்லை. அவரே எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்றார். அவருடனேயே என்னை எப்போதும் வைத்துக்கொண்டார்.

ஒரு நாள், அவர் போலீஸ் அதிகாரியை அழைத்தார். அவர் என்னை கைது பண்ண வந்தார். எனக்கு திக் என்றது. இந்திய அணியை தொடர்பு கொள்ள நினைத்தேன். தவறு ஏதும் பண்ணவில்லை, ஏன் என்னை கைது செய்ய வேண்டும்? என்று குழம்பினேன். பிறகுதான் தெரிந்தது, அந்த அதிகாரி பொல்லார்டின் நண்பர் என்பது. அது என்னை ஏமாற்ற செய்யப்பட்ட நாடகம் என்பது பிறகு தெரிந்தாலும் நான் பயந்தது உண்மைதான்’ என்றார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close