[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
விளையாட்டு 26 Nov, 2017 10:57 AM

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: விராத் கோலியும் அபார சதம்

virat-kohli-slams-51th-international-century

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய், புஜாராவை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும் சதமடித்தார். 

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முரளி விஜய்யும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10-ஆவது சதத்தையும் புஜாரா 14-வது சதத்தையும் அடித்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் விராத் கோலி, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா 121 ரன்களுடனும், கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய விராத் கோலி சதமடித்தார். இது அவருக்கு 19 டெஸ்ட் சதமாகும். ஒரு நாள் போட்டியையும் சேர்த்து இது அவருக்கு 51-வது சதமாகும். கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புஜாரா 134 ரன்களுடனும் கோலி ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்துள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close