[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

தென்னாப்பிரிக்க அணியில் பீட்டர்சன்?

kevin-pietersen-eyeing-return-to-international-cricket-with-south-africa

இங்கிலாந்து அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள கெவின் பீட்டர்சன், தென்னாப்பரிக்க அணி மூலமாக சர்வதேச போட்டிகளுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக வலம்வந்த பீட்டர்சன், அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ட்ராஸ் குறித்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளை குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி நிர்வாகம் அவரை ஓரங்கட்டியது.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு கிட்டும் என்று எண்ணியிருந்த பீட்டர்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, தனது பிறந்த நாடான தென்னாப்பிரிக்கா மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவர் முடிவு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான ரைசிங் புனே அணிக்காக விளையாடி வரும் பீட்டர்சன், விரைவில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடினாலும் ஆச்சயர்மில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close