[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
 • BREAKING-NEWS நவ.26 முதல் 28வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்- இந்திய வானிலை மையம்
 • BREAKING-NEWS உத்திரப்பிரதேசம் பண்டாவில் வாஸ்கோடாகாமா- பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து
 • BREAKING-NEWS விளை நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம், ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட 8 ஊர்களில் கடையடைப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தை பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்- தமிழிசை
 • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
 • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
 • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
 • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
விளையாட்டு 29 Oct, 2017 10:01 PM

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரை போராடி வென்றது இந்தியா

india-won-the-series-against-new-zealand

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் போராடி வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 337 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சதம் அடித்தனர். பின்னர் ரோகித் 147 ரன்களிலும், கோலி 113 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய தோனி 25 ரன்களும், கேதர் ஜாதவ் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து 338 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கத்திலேயே குப்தில் 10 ரன்கள் அவுட்டாக தடுமாறியது. இருப்பினும் அடுத்தடுத்து விளையாடிய வீரர்களான காலின் முன்ரோ 75, கெயின் வில்லியம்சன் 64, ரோஸ் டைலர் 39, டாம் லதாம் 65, ஹென்றி நிகொல்ஸ் 37 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. அதன்படி இறுதி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடி நியூலாந்து அணி, இந்திய வீரர் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிர்கொள்ள முடியாமல் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close