[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

விராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா?

kohli-anushka-to-get-married-in-december

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரை அடுத்து இலங்கை அணியுடன் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போடிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 16-ம் தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, அடுத்த டெஸ்ட் போட்டியில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்றும் சொந்தக் காரணங்களுக்காக தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டதாகவும் தேர்வுக் குழுவினர் நேற்று தெரிவித்தனர்.

விராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்துவருகிறார். டிசம்பர் மாதம் அவரை விராத் கோலி திருமணம் செய்துகொள்ள இருப்பதால்தான் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close