[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஆசியக்கோப்பை ஹாக்கி: இறுதிபோட்டியில் இந்தியா - மலேசியா மோதல்

hockey-asia-cup-malaysia-draw-south-korea-to-advance-to-final

ஆசியக்கோப்பை ஹாக்கியில் தென்கொரிய அணிக்கு எதிரான சூப்பர் நான்கு சுற்று ஆட்டத்தில் சமன் செய்து மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென்கொரிய அணியும், மலேசியா அணியும் மோதின. இந்தப்போட்டியில்  ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் யாங் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். போட்டி முடிய சில நிமிடங்ளே இருந்த போது மலேசிய வீரர் சாரி கோல் அடித்து சமன் செய்தார். இதனையடுத்து பி பிரிவில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து மலேசிய ‌அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து மலேசிய அணி விளையாடுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close