[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

லா லீகா கால்பந்து தொடர்: பார்சிலோனா அணிக்கு 7‌வது வெற்றி

barcelona-wins-in-an-empty-stadium-amid-catalan-voting-strife

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி, தொடர்ந்து 7வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சொந்த மண்ணில் நடந்த போட்டியில், லாஸ் பால்மாஸ் அணியை எதிர்த்து பார்சிலோனா அணி‌ விளையாடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்தில் பார்சிலோனா அணி கோல் கணக்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 70 மற்றும் 71வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்து பார்சிலோனா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

முடிவில் மூன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி கேட்டலோனியா பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், போட்டியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டிற்கான, லா லீகா கால்பந்து தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றியை வசமாக்கியுள்ள பார்சிலோனா அணி, 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close