[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
  • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
விளையாட்டு 15 Sep, 2017 09:40 PM

தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்காதது இதனால்தான்... மனம் திறந்தார் சேவாக்!

that-s-why-the-head-coach-did-not-get-the-job-shewak-open

இந்திய கிரிக்கெட் போர்டு கவுன்சிலுடன் தனக்கு எந்தவித நெருக்கமும் இல்லாததால் தலைமை பயிற்சியாளர் பதவி தனக்கு கிடைக்கவில்லை என சேவாக் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர் கும்ளே. கோலியுடனான மனக்கசப்பால் அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வுக்கு இந்திய அணியின் முன்னாள்  வீரர் சேவக்கும் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்குப் பிறகு  விண்ணப்பித்த ரவிசாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்துள்ள சேவாக், ‘பிசிசிஐயில் நான் நெருக்கமாக இல்லாததால் தேர்வு செய்யப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது நான் இங்கிலாந்தில் இருந்த போது, ரவி சாஸ்திரியிடம், நீங்கள் ஏன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என கேட்டேன். அதற்கு ரவி சாஸ்திரி, நான் ஏற்கனவே ஒரு தவறை செய்து விட்டேன். இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் எனக் கூறினார். இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை. பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் எம்.பி. ஸ்ரீதர் என்னிடம்  தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து யோசிக்கும்படி தெரிவித்தார். நான் யோசித்து அதன்பின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தேன். ஆனால் என்னை தேர்வு செய்யவில்லை’ எனத் தெரிவித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close