[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
  • BREAKING-NEWS மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு
  • BREAKING-NEWS வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு

ஆஸி.யுடன் அந்த சாதனை... முறியடிப்பாரா ரோகித்?

i-don-t-want-any-break-says-rohit

ஆஸ்திரேலியாவுடன் கடந்த முறை நடந்த தொடரில் சிறப்பாக ஆடியது போல, இந்த முறையும் என்னால் விளையாட முடிந்தால் மகிழ்ச்சிதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேஸ்ட்மேன் ரோகித் சர்மா கூறினார்.

2013-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது நடந்த 7-வது ஒருநாள் போட்டியில், அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, 158 பந்துகளில் 209 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதில் 16 சிக்சர்களும் 12 பவுண்டரிகளும் அடங்கும். இது போன்ற சாதனை ஆட்டத்தை இந்த முறை எதிர்பார்க்கலாமா என்று கேட்டபோது, மேற்கண்டவாறு சொன்னார் ரோகித் சர்மா.
அவர் மேலும் கூறும்போது, ‘அப்போது ஆடிய ஆஸ்திரேலிய அணி வேறு. இப்போதைய இந்திய அணியும் வேறு. அப்போது ஆடியபோது வேறு மனநிலை இருந்தது. இப்போது இருப்பது வேறு. ஒவ்வொரு முறையும் புதிய மனநிலையில் புதிய தொடரில் ஆடுகிறோம். அதோடு பழைய விஷயங்களை எப்போதும் நான் நினைத்துப் பார்ப்பதில்லை. அதனால்தான் அப்போது ஆடியதை போல இப்போது நடந்தால் மகிழ்ச்சி என்று சொல்கிறேன்’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close