[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

மாநில அளவிலான டென்னிஸ்: ஏபிஎல் க்ளோபல் பள்ளி சாதனை

state-level-tennis-apl-global-school-achievements

ஐஜிசிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், ஏபிஎல் க்ளோபல் பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கேம்பிரிட்ஜ் சர்வதேச தேர்வு மையத்தின் கீழ் செயல்படும் ஐஜிசிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில், பிரனவ் பொன்னிவளவன் சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 17 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில், சஞ்சய் சுப்பிரமணியன் சாம்பியன் பட்டம் வென்றார். பிரனவ் பொன்னிவளவன் இறுதிப்போட்டியில், கோயம்புத்தூரை சேர்ந்த ஆதித்யாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். சஞ்சய் சுப்பிரமணியன் மதுரையை சேர்ந்த ஜார்ஜை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெற்றி குறித்து பிரனவ் பேசும்போது, தமிழ்நாடு அளவில் எனக்கு கிடைக்கு மிகச்சிறந்த முதல் வெற்றி என்றார். சாம்பியன் பட்டம் வென்றது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சஞ்சய் சுப்பிரமணியன் கூறினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close