[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

வெஸ்ட்இண்டீசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஆப்கானிஸ்தான்

afghanistan-upset-west-indies-by-6-runs

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில்‌ வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஆச்சர்ய வெற்றியை பெற்றது.

நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 123 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இ‌ழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், தொடரில் தோல்வியைச் சந்திக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது.

முன்னதாக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் ஜர்தான் 48 மற்றும் தொடக்க ஆட்டக்காரர் செஷாத்தின் 24 ரன்கள் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சாமுவேல் பத்ரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close