[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
 • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
 • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
 • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
 • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
விளையாட்டு 31 Aug, 2017 07:33 AM

தோனிக்கு காத்திருக்கும் 3 சாதனைகள்

dhoni-to-tick-another-box

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் மகேந்திர சிங் தோனி இன்று சில சாதனைகள் படைக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி பிற்பகல் இரண்டரை மணிக்குத் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில், அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான், உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது. 

இந்தப் போட்டி, தோனியின் 300-வது போட்டியாக அமைய உள்ளது. 2004-ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அறிமுகமான தோனி, இதுவரை 9 ஆயிரத்து 608 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங்குகளை செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்கவும் தோனிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரும், சங்ககராவும் 99 ஸ்டம்பிங்குளை வீழ்த்தி சமநிலையில் உள்ளனர். அதேபோல், அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் வெளியேறிய வீரர் என்ற புதிய சாதனையும் தோனியின் வசம் வர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் விக்கெட் கீப்பரான தோனி, நேற்று பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close