[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

அசார் அலிக்கு பதிலடி கொடுத்த வார்னர்

aus-vs-pakistan-2nd-test

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது‌ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வார்னரின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்துள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஸ்கோரான 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்னோடு மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அசார்அலி 139 ரன்னுடனும், முகமது சமீர் 28 ரன்னுடனும் ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க வீரராக களம் இறங்கிய அசார் அலி மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 362 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரியுடன் 200 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 205 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் பேர்டு, ஹாசல் வுட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் ரென்ஷா 10 ரன்னில் யாசிர்ஷா பந்தில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து களம் இறங்கிய உஸ்மான் கவாஜா, வார்னருக்கு பக்கபலமாக ஆடினார். இருவரும் பாகிஸ்தான்வீரர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 143 பந்துகளில் 17 பவுண்டரி 1 சிக்ஸருடன் 144 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஸ்மித் நிதானமாக ஆட்டத்தை வெளிபடுத்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 278 எடுத்துள்ளது. பாகிஸ்தானை விட ஆஸ்திரேலியா அணி 165 ரன்கள் பின்தங்கியுள்ளது அந்த அணியின் கைவசம் 8 விக்கெட் உள்ளது. உஸ்மான் கவாஜா 95 ரன்களுடனும், ஸ்மித் 1௦ ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close