[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ஆல்ரவுண்ட் சாதனை படைத்து அசத்திய அஸ்வின்

india-vs-england-ravichandran-ashwin-reaches-rare-landmark-first-man-since-1985-to-do-so

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல்ரவுண்டராக சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 25 விக்கெட்டுகள் மற்றும் 250 ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். கடந்த 1985ம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்த சாதனை நிகழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் வேகவேங்கை என்றழைக்கப்படும் இயான் போத்தம் இந்த சாதனையை படைத்திருந்தார். அந்தத் தொடரில் 250 ரன்களும், 31 விக்கெட்டுகளையும் இயான் போத்தம் கைப்பற்றி இருந்தார்.

தற்போது தமிழகத்தைச் சேர்ந்த வலதுகை சுழற்பந்து வீச்சாளாரான அஸ்வின் இந்தச் சாதனையை சொந்த ரசிகர்கள் முன்னிலை நிகழ்த்தியிருக்கிறார். தற்போதைய இங்கிலாந்து தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 306 ரன்களையும் குவித்துள்ளார். அஸ்வினின் இந்த சாதனையின்போது இயான் போத்தம் வர்ணணை செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1979-80களில் நடந்த பாகிஸ்தான் அணியுடனான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் கபில்தேவ் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதோடு 278 ரன்களைக் குவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close