[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம்..!

bouble-century-for-virat-kohli

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4-ஆம் நாளான இன்று இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். 302 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரட்டை சதத்தை தொட்டார். இதில் 23 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.

இதற்கு முன்பாக இந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக போட்டிகளில் விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒரே ஆண்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.

தற்போது உணவு இடைவெளியின் போது விராட் கோலி 317 பந்துகளில் 212 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close