மும்பை டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்துள்ளது.
ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா தனது முந்தைய நாள் ஸ்கோரான 47 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து முரளி விஜய், கேப்டன் விராத் கோலி கைகோர்த்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைக் கடுமையாகச் சோதித்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்த நிலையில் முரளி விஜய் 136 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 262 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி அடுத்த 45 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 15ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார். அவருடன் 8ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜெய்ந்த் யாதவ் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 51 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராத் கோலி 147 ரன்களுடனும், ஜெய்ந்த் யாதவ் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட், மொயின் அலி, அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !