[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ஐபிஎல் வீரர்கள் ஏலம் எப்போது?..புதிய தகவல்கள்

ipl-10-players-auction-to-be-held-in-bengaluru-next-month

ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வரும் டிசம்பரில் நடக்கிறது.   
உலக அளவில் பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்கிறது. அதன்படி வரும் 2017ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல்-லின் 10ஆவது தொடர், தற்போதுள்ள 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் இறுதி தொடராகும். இதுதொடர்பாக டெல்லியில் நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில், தொடரை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்கே, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் 2017ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரின் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிப் போட்டி நடப்பது குறித்து கடந்த ஆண்டு தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் அணி தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக கடந்த ஐபிஎல் போட்டிகள் நடக்காத மகராஷ்ட்ரா மாநிலத்தில் அடுத்த ஐபிஎல் தொடரின் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல்-லின் 10ஆவது தொடரை அடுத்தாண்டு ஏப்ரல் 5ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close