[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

இந்தியா-இங்கி. முதல் டெஸ்ட் நடக்குமா?... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

bcci-moves-supreme-court-to-release-funds-for-india-england-test-tomorrow

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நடத்த நிதி ஒதுக்க அனுமதி அளிக்கக் கோரி பிசிசிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜ்கோட் போட்டியை நடத்த ரூ.58.66 லட்சத்தை ஒதுக்க பிசிசிஐக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் விதித்த இறுதிக் கெடுவுக்குள் (நவம்பர் 3) அமல்படுத்த பிசிசிஐ தவறியது. இதையடுத்து லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை மாநில சங்கங்களுக்கு நிதி ஒதுக்க பிசிசிஐக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ராஜ்கோட்டில் நாளை தொடங்குவது உறுதியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close