[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

இந்திய அணி வென்ற தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

south-asian-games-2016-tamil-nadu-players-win-gold

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சிக்கிம் மாநிலம் ஷில்லாங் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

போட்டி தொடரின் 5வது நாளான இன்று, நடைபெற்ற ஆடவர் இரட்டையர் டென்னிஸின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் - விஜய் சுந்தர்

பிரசாந்த் இணை, சனம் சிங் - திவிஜ் சரன் இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. முதல் நிலை ஜோடிக்கு எதிராக , தமிழக வீரர்கள்‌ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ராம்குமார் ராமநாதன் - விஜய் சுந்தர் பிரசாந்த் இணை வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.


இதுவரை 114 தங்கம்‌, 59 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 186 பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 21 தங்கம், 44 வெள்ளி, 61 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் இலங்கை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 7 தங்கம், 18 வெள்ளி, 32 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. நேபாள அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close