[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?

mamata-banerjee-on-warpath-with-centre-over-cbi-move

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்திய அரசியல் விறுவிறுப்பாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் ‌சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் சேர்ந்து வலுவான அணியை அமைத்துள்ளன.‌ 80 தொகுதிகள் கொண்ட உ‌த்தர பிரதேசத்தில் கணிசமான தொகுதிகளை வென்று பிரதமர் பதவிக்கான போட்டியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள மாயாவதி திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் தெலங்கானா தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள ‌சந்திரசேகர‌ ராவ், ஃபெடரல் ஃப்ரன்ட் எ‌ன்‌ற பெயரில் 3வது அணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக நாடெங்கும் கடந்த ஒரு ஆண்‌டாக சுற்றுப்பயணம் செய்து தலைவர்களை சந்தித்த அவர், அதன் உச்சக்கட்டமாக பிரமாண்ட கூட்டத்தையும் சமீபத்தில் நடத்தினார்.

இந்திய அரசியலில் பாஜக , காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சியமைத்து வரும் வேளையில் தற்போதைய தேவை இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணி என்று பல தலைவர்கள் நினைக்கிறார்கள். அதற்கான வேலை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் கைகோர்த்து இந்த மூன்றாவது அணியை உருவாக்க வேண்டுமென்றாலும், அவர்களின் எதிர்ப்பு  நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியும் இருப்பதால் வரும் மக்களவை தேர்தல் மும்முனையாக போகலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

மூன்றாவது அணி என்ற ரேசில் மம்தா பானர்ஜி தனித்து தெரிவதாகவும், சமீபத்திய அவருடைய நடவடிக்கைகள், ஆளும் மத்திய அரசுக்கு குடைச்சலை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பாஜக எதிர்ப்பு கட்சிகளுக்குள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அடி முன்னதாகவே செல்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பிரம்மாண்ட கூட்டத்தை நடத்தி சமீபத்தில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மம்தா, அடுத்து தர்ணா என்னும் அஸ்திரம் மூலம் தன்னை நிலைப்படுத்திக்கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.  நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க காவல்துறையினர், ஆணையர் இல்லத்தின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி அதிரடி காட்டினர். பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்ட கூட்டத்தை தான் சமீபத்தில் கூட்டிவிட்டேன் அதற்காக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக மம்தா குற்றஞ்சாட்டி தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

மம்தாவின் இந்த திடீர் அரசியல் தாக்குதலுக்கு கணநேரத்தில் இந்தியா முழுவதில் இருந்தும் ஆதரவு குரல்கள் வந்தன. தெற்கில் ஸ்டாலின் தொடங்கி, சந்திரபாபு நாயுடு, கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், ராகுல்காந்தி என பலரும் ஆதரவு தெரிவித்தனர். 

தனது அரசியல் நகர்வுகளை மம்தா ஒரே கோட்டில் இணைத்து வருவதாகவும், அதற்கான ஆரவுகளை பெற்று அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வது மூலம் மம்தா தனித்து தெரிய தொடங்கி இருக்கிறார் என்பதுமே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் மம்தாவின் நகர்வெல்லாம் பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பது மட்டுமல்ல என்றும் மூன்றாம் அணிக்கான அடித்தளம் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் மம்தாவின் அதிரடி நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தலில் தொய்வை ஏற்படுத்தலாம் என தெரிகிறது.

சமீபத்தில் இந்தியா டுடே - கர்வே நிறுவனத்துடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு தெரிவித்தது என்னவென்றால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி திரிணாமூல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதே. அப்படி பார்த்தால் தற்போது மம்தா பானர்ஜியின் நகர்வுகள் மீது தான் அனைவரின் கவனமும் இருப்பதாகவும் அதற்கு ஏற்ப தன் நகர்வுகளை சரியாக அவர் கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close