[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சர்ஜிக்கல் ஸ்டிரைக்... 2 ஆண்டுகள் நிறைவு

indian-govt-to-celebrate-september-29-as-surgical-strike-day

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் ‌துல்லிய தாக்குதல் எனப்படும் "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" நடத்தி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'. கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இரவு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரியில் முகாமிட்டிருந்த டோக்ரா படைப்பிரிவினருக்கு மறக்க இயலாத நாளாக மாறிவிட்டது. அப்பகுதியில் திடீரென ஊடுருவிய பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாக்குத‌லின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு இருந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இதனையடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 29ஆம் தேதி அதிகாலை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த இந்திய ராணுவ சிறப்புப் படை வீரர்‌கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தினர். நள்ளிரவில் தொடங்கிய தாக்குதல் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியதாக இந்திய ‌ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், எல்லை தாண்டி வந்து‌ தங்களது மண்ணில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டியது‌.

ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் அதிரடி தாக்குதலின் பெயரே சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகும். தாக்குதல் நடைபெற்று ‌636 நாட்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய முதல் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டது. துருவ் ஹெலிகாப்டர் மூலம் சென்று, அதிலிருந்து பாராசூட் மூலம் குதித்த சிறப்புப் படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 4 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் அந்த பதிவில் இடம்பெற்றிருந்தன. ‌தாக்குதலை டெல்லியில் இருந்தபடி அப்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் நேரடியாக கண்காணித்ததாகவும் தகவல் வெளியானது.

இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் செப்டம்பர் 27ஆம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் இரண்டாவது வீடியோ வெளியானது. இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து முரண்பட்ட கருத்துகள் எழுந்த நிலையில், புதிய வீடியோ வெளியிடப்பட்டது. ஆளில்லா விமானத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டது போல் காட்சியளிக்கும் இந்த வீடியோவில் பயங்கரவாதிகளின் முகாம்கள், ஆயுதங்கள், இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசு சாதனையாக கருதி  “சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினம்” ஆக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து, நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close