[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ஜனவரி 19: சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று

history-of-january-19

பக்தி இசையிலும், திரை இசையிலும் புகழ் பெற்ற சீர்காழி எஸ். கோவிந்தராஜன் சீர்காழியில் 1933ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். சென்னை இசைக்கல்லூரியிலும், திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடமும் இசை கற்ற அவர், இசைமணி பட்டம் பெற்றவர்.

கர்நாடக இசை உலகில் தனி முத்திரை பதித்த சீர்காழி எஸ். கோவிந்தராஜன் 1953ஆம் ஆண்டு வெளிவந்த பொன்வயல் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து தனது இறுதிக்காலம் வரையிலும் திரைப்படங்களில் பாடி வந்தார். வெளி நாடுகளிலும் கச்சேரிகள் செய்து புகழ்பெற்ற சீர்காழி, சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கணீர் குரலால் தேமதுரத் தமிழோசை உலகெங்கிலும் பரவச்செய்த சீர்காழிக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தது.

ஜன. 19, 1960 அமெரிக்கா-ஜப்பான் உடன்பாடு

பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை இணைந்து எதிர்கொள்ளும் பொருட்டு ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையே வாஷிங்டனில் 1960 ஆம் ஆண்டு 19ஆம் நாள் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. இதன்படி கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்ட ஜப்பானில் அமெரிக்கப்படைகளை நிறுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவது, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற விவகாரங்கள் தொடர்பான விசயங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இன்றளவும் இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்த உடன்பாடே உறுதி செய்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close