[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

பெண்களே உங்கள் கணவர் சமைக்க மறுக்கிறாரா ? இதை படித்து காட்டுங்கள்

wife-must-said-this-to-husband-for-cooking

சமையல் என்பது மிகச் சிறந்த கலை. எல்லாருக்கும் அது எளிதில் வாய்த்து விடுவதில்லை. உங்கள் கை பக்குவம் மாதிரி வருமா என சிலரை பார்த்து சிலாகிப்பதும் உண்டு. வீடுகளில் பெண்கள் சமைத்தாலும் , சிறந்த சமையல்காரார்கள் பட்டம் வாங்குபவர்கள் என்னமோ ஆண்களாகவே இருக்கிறார்கள். சமீப காலமாக ஆண்கள் சமைப்பதை பெண்ணின் வேலை என கொள்ளாமல், அதுவும் ஒரு கலை என அறிந்து முன்வந்து செய்வதை பார்க்க முடிகிறது. வீடுகளில் ஆண் சமைப்பதை ரசித்து ஸ்டேட்டஸ் போடும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்னும் உங்கள் கணவர் சமைக்க மறுக்கிறாரா ? இல்லை அய்யோ சமையலா என எரிச்சல் அடைகிறாரா ? அப்போ இதை நீங்க கண்டிப்பா அவருக்கு படித்து காட்டி விடுங்கள். ஏனெனில் மனைவிக்காக சமைக்க முன்வரும் பல கணவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஆண்கலிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஆண்கள் சிறு வயது முதலே சமைக்க கற்றுக் கொண்டு தொடர்ந்து சமைப்பதால், நிறைய நன்மைகள் ஏற்படுகிறது என அறியப்பட்டுள்ளது.

சிறு வயதிலேயே சமைக்க கற்றுக் கொள்வதால், எடை மேலாண்மை அறிவு வளர்கிறது. சரிவிகித உணவு என்றால், எந்தெந்த சத்துகள் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த காய்கறி பயன்படுத்த வேண்டும் என பல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். தொப்பையோடு இருக்காமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள அது உதவும். இல்லை என்றால் ஜிம்முக்கு சென்று ஓட வேண்டியதுதான். அப்படி ஓடினால், உங்கள் பட்ஜெட்டில் மாதம் 200 வரை துண்டு விழும். அது சேமிக்கப்படும்.

சாதரணாமாக பெண்கள் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தேடித்தேடி சமைப்பார்கள். அதோடு என்ன சமைப்பது என தெரியாமல் குழம்புவதையும் நாம் பார்த்திருக்க முடியும். அதுவே ஒரு ஆண் தனது சிறு வயதில் சமைக்க ஆர்வம் காட்ட தொடங்கியிருந்தார் என்றால் இந்த பிரச்னையை எளிதில் கையாளும் திறன் வந்து விடுமாம். வகை வகையாக சமைத்து தள்ள கற்றுக் கொண்டே இருப்பார்களாம்.

ஆண்களை பொறுத்தவரை சமையலை அவர்கள் ஒரு வேலையாக பார்க்க மாட்டார்களாம். தொடக்கத்தில் அது ஒரு எரிச்சலை கொடுத்தாலும், அம்மாவோ, மனைவியோ, மகளோ அவர்களது சமையலை பாராட்டி விட்டால் போதும் உலகில் அவர்களை விட மகிழ்ச்சியான நபர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் சமையலில் சிறந்தவர்கள் பெண்கள்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். அப்படிப்பட்ட பெண்களே பாராட்டி விட்டால், மகிழ்ந்து விடுவார்கள். இதனால் ஆண்களின் ஆயுட்காலம் அதிகரித்து, நோய் வரும் விகிதம் குறைகிறது.

அனைத்தையும் தாண்டி சமைப்பது என்பது ஒரு சிகிச்சை போன்றது என்கின்றது ஆய்வு. சமைப்பது ஆண்களை சுயமாக இயங்குபவர்களாகவும் , வீணாக செலவழியும் பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமையும். இருப்பதை கொண்டு நிறைவாக சமைக்கும் பழக்கம் ஆண்களுக்கு தானகவே அமைந்து விடுகிறது என்கிறது அந்த ஆய்வு. குறிப்பாக காய்கறிகளை வெட்டும் போது உன்னிப்பாக கவனிக்கும் திறன, முழுமை பெற வேண்டும் என்பதில் உள்ள கவனம் தியானத்திற்கு ஒப்பாகிறது.

(தகவல்கள் : இந்துஸ்தான் டைம்ஸ்)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close