[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

’தமிழன்டா...’ தினேஷ் கார்த்திக்கிற்கு குவியும் வாழ்த்துகள்!

the-wait-ends-for-dinesh-karthik

முத்தரப்பு டி20 போட்டியில் பங்களாதேஷூக்கு எதிராக நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அதிரடி காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சபீர் ரகுமான் அதிகப்பட்சமாக 77 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி, கடைசிக்கட்டத்தில் தடுமாறியது. ரோகித் சர்மா 42 பந்தில் 56 ரன் எடுத்து அவுட் ஆனதும் நிலைமை மோசமானது.  போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில், தமிழக வீரர் விஜய் சங்கர் பொறுமையை சோதித்தார். முஸ்தாபிஹூர் வீசிய 4 பந்துகளை வீணடித்து ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை அதிகரித்தார். ஆனால் மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அவர் 8 பந்துகளில் மூன்று சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன் குவித்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவின் வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக், ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கை பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அபாரம் என பதிவிட்டுள்ளார். இதே போல், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்டோரும் பாராட்டிப் பதிவிட்டுள்ளனர்.

ஷிகர் தவான், ’என்னவொரு ஆட்டம். தினேஷ் கார்த்திக், என்னவொரு வீரர். கடுமையான அழுத்தத்துக்கு மத்தியிலும் சிறப்பாக போட்டியை முடித்ததற்கு தலை வணங்குகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர், சேவாக், ‘என்ன ஒரு வெற்றி. இரண்டு ஓவரில் 34 ரன்கள். வாழ்த்துகள், தினேஷ் கார்த்திக்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ரசிகர்கள் பலர், ’தமிழன்டா’ என்று பெருமையாகப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close