[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஐபிஎல் அறிமுகம் 4: தோனி ஊரில் இருந்து இன்னொரு விக்கெட் கீப்பர்!

ishan-kishan-mumbai-indian-s-player

’தோனிக்குப் பிறகு அவர் இடத்தை இவர்தான் நிரப்புவார்’ என்கிறார்கள் இஷான் கிஷானை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நடந்த விஜய் ஹசாரே போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக இவர் அடித்த 93 ரன்கள் மிரட்டியிருக்கிறது. இதில் ஐந்து பவுண்டரிகளும் ஏழு சிக்சர்களும் அடங்கும். இதற்கு முன் விஜய் ஹசாரே போட்டியில் தோனி, ஒரே போட்டியில் 6 சிக்சர் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் கிஷான்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இந்த கிஷான், பந்துகளை பதம் பார்ப்பதில் தோனி வேகம் இல்லை என்றாலும் அவர் ஸ்டைலையே பின்பற்றுகிறார். தோனியின் மாநிலமான ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடும் இந்த கிஷான் பிறந்து வளர்ந்தது பீகாரில். அங்குள்ள கிரிக்கெட் சங்கத்துக்கும் பிசிசிஐ-க்குமான வீரர்கள் பதிவு பிரச்னை காரணமாக, பக்கத்து மாநிலமான ஜார்க்கண்ட்டுக்கு விளையாட வந்துவிட்டார்.

இந்த ஐபிஎல் போட்டியில், 6.2 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்து இவரை ஏலத்தில் அள்ளியிருக்கிறது, மும்பை இண்டியன்ஸ் அணி. (2016-ல்  35 லட்சத்துக்கு  எடுத்திருந்தது, குஜராத்).

’இவ்ளோ கோடிக்கு இவர் வொர்த்தா?’ என்று புருவம் உயர்த்தாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் இஷான், இன்னும் இருபதைக் கூட தாண்டவில்லை. பிறகு எப்படி?

2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு இஷான்தான் கேப்டன். அந்தத் தொடரில் இவர் பேட்டிங்கில் சொதப்பினாலும் ஃபைனல் வரை இந்திய அணி செல்ல இவரது கேப்டன்ஷிப்தான் காரணம். முதிர்ச்சியான இவரது வழிநடத்தல் வியக்க வைத்தது, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களை. ‘இந்த சின்ன வயசுல இவ்வளவு மெச்சூர்டா?’ என்ற வியப்புதான் U 19 டீமுக்கு கேப்டன் ஆக்கியது.

இஷானின் திறமை முதலில் தெரியவந்தது, 2015-ல் நடந்த ரஞ்சிப் போட்டியில். சவுராஷ்ட்ராவுக்கு எதிராக, இவர் குவித்த ரன்கள் கூட பரவாயில்லை. ஆனால், அவர் அடித்த அந்த எட்டு சிக்சர்கள் இருக்கிறதே, ஆத்தாடி, அற்புதம், அபாரம். பார்த்தவர்கள், ’யாருப்பா இது’ என்று கவனிக்கத் தொடங்க, பிறகுதான் இவருக்குக் கிடைத்தது அந்தக் கேப்டன் பதவி. 

‘நான் கேப்டனாக இருந்த 2017 ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் போதும் ராகுல் டிராவிட்தான் கோச். அவர்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். விளையாடப் போகும் முன், சிறப்பாக விளையாடிய இன்னிங்ஸை மனதில் வைத்துக்கொள். அதை போல் விளையாடு என்பார். அதையே பின்பற்றி ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வேன். அதனால் எளிதாக பந்துகளை அடிக்க முடிகிறது’ என்கிற இஷான், இந்திய அணியில் இடம் பிடிக்கும் காலம் தூரமில்லை என்கிறார்கள்.
 
’விக்கெட் கீப்பிங்கில் வேகமா செயல்படணும். பேட்டிங்கில் இறங்கிட்டா, எந்த பந்தையும் விளாசணும்’ என்கிற முடிவோடு இருக்கிற இஷானின், பேவரைட் வீரர்கள், தோனியும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டும்!
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close