[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா! 

chennai-rain-song-trending-in-socialmedia

சென்னை மழை  குறித்து பெண்மணி ஒருவர் பாடியுள்ள பாடல், சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. 

சென்னையில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ள நீர் வெளியேறியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மழை வெள்ளம் குறித்து பெண்மணி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

‘கர்ணன்’ படத்தில் வெளியான,  “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா” என்ற பாடலை அவர் ரீமேக் செய்து பாடியுள்ளார்.  “சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா, எம்மிடம் அருள் செய்யடா” என அந்தப் பெண்மணி பாடியுள்ளார். கால்வாய்க்கு வழி இல்லை நீர்போக பாதையில்லை என இன்றைய சென்னை நிலையையும் அவர் அந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னை மக்கள், மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும் நீர் வடிய நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close