[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்வு
 • BREAKING-NEWS தமிழக அரசியலில் விசிக மாநில சுயாட்சி மாநாடு திருப்பு முனையாக அமையும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS அதிமுகவின் 3 அணிகளும் எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் செயல்படுகின்றன: நல்லகண்ணு
 • BREAKING-NEWS உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து
 • BREAKING-NEWS திராவிடத்தால் உரமேற்றப்பட்ட மண் திருவாரூர்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS அதிமுகவின் இரு அணிகள் விரைவில் இணையும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS சென்னை: பள்ளிக்கரணையில் தண்ணீர் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS விரைவில் இரு அணிகளும் இணையும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளது: தமிழிசை
 • BREAKING-NEWS மதுரை: இடையபட்டியில் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்
 • BREAKING-NEWS அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையா?: கே.பி.முனுசாமி விளக்கம்
 • BREAKING-NEWS இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு கூடுதல் அறைகள் திறப்பு
சிறப்புக் கட்டுரைகள் 09 Jun, 2017 01:38 PM

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி? இதோ சில வழிகள்

tips-to-find-plastic-rice

 

மனிதன் உயிர்வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவு. அந்த உணவிற்காகத்தான் ஓடி ஓடி உழைக்கிறோம். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது வேதனையானது. தமிழகத்தில் ஆவின்பால் தவிர, மற்ற தனியார் பால் அனைத்திலும் கலப்படம் செய்கிறார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில நாட்களுக்கு முன் பகீர் குற்றச்சாட்டு வைத்தார். நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிற அமைச்சரே, குற்றச்சாட்டை வைத்ததோடு நிறுத்திவிட்டார். கலப்படத்தை கண்டுபிடிக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலப்படம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை இல்லை.

தமிழகத்தில் பால் என்றால், வடமாநிலங்களில் பிளாஸ்டிக் முட்டைகள், பிளாஸ்டிக் சர்க்கரைகள். ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் பால், முட்டைகளின் கலப்படத்தை தொடர்ந்து, அரிசியிலும்கை வைத்துவிட்டார்கள். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அதிகப்படியான பிளாஸ்டிக் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதனை தெளிவாக உணர்த்துகிறது. சாப்பிட்டால் வாழலாம் என்ற நிலைமாறி சாப்பிட்டால் சாவுதான் என்கிற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பிளாஸ்டிக் அரிசிகள் பற்றிய தொடர் புகார்களை
அடுத்து, தமிழகத்திலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்களுக்கும் பல சந்தேகங்கள் வரலாம். நீங்கள் வாங்கியிருக்கும் அரிசி, பிளாஸ்டிக் அரிசியா, இல்லையா என்பதை வீட்டில் இருந்தே நீங்களும் பரிசோதிக்க முடியும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை தீக்குச்சி அல்லது லைட்டர் கொண்டு கொண்டு பற்றவையுங்கள். அப்போது பிளாஸ்டிக் வாசனையை நீங்கள் நுகர்ந்தால், அது பிளாஸ்டிக் அரிசிதான்.

* நன்றாக கொதிக்க வைத்து வேக வைத்த அரிசியை ஒரு பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் யார் கையும் படாதபடி, ஒரு இடத்தில் வையுங்கள். 3 நாட்கள் கழித்து பார்க்கும்போது, அந்த அரிசி எந்தவித பூஞ்சை தாக்குதலுக்கும் ஆளாகவில்லை எனில், முடிவு செய்துவிடுங்கள் அது பிளாஸ்டிக் அரிசியென்று.

*சிறிது அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது சூடான எண்ணெய் ஊற்றுங்கள். அப்போது அரிசி உருகினால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.

* சாதாரண தண்ணீர் கொண்டு கூட பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க முடியும். ஒரு பாட்டில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், ஒரு ஸ்பூன் அரிசியை கொட்டுங்கள். பின் சிறிது நேரம் கலக்குங்கள். அப்போது அரிசி தண்ணீரின் மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. ஏனென்றால் இயற்கையான அரிசி ஒருபோதும் தண்ணீரில் மிதக்காது. 

* பிளாஸ்டிக் அரிசியை சமைத்தப் பின்னர் சாதாரண அரிசிச்சோறு போல் கையில் ஒட்டாது. எவ்வளவு நேரமானாலும் அரிசிச்சோறு கெட்டுப்போகமால் இருக்கும். அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக் அரிசி என சந்தேகம் வந்தால், அவற்றை சோறாக்கிய பின்னர் பந்துபோல் உருவாக்கி தரையில் போட்டால், துள்ளி குதிக்கும். இதன் மூலமும் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க முடியும்.

*பாத்திரத்தில் கொஞ்சமாக அரிசியை எடுத்து கொதிக்க விடுங்கள். அரிசி கொதிக்கும்போது, பாத்திரத்தில் அடர்த்தியான லேயர் படிந்தால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.

மேற்கூறிய முறைகளில் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்க முடியும். பிளாஸ்டிக் அரிசியால் புற்றுநோய், பிறப்பு குறைபாடு உள்ளிட்ட பல மோசமான நோய்கள் வருமாம். எனவே ஒவ்வொரு முறை அரிசி வாங்க செல்லும் முன் விழிப்புடன் இருப்பது சிறந்தது.

 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close