[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

வரலாற்றில் இன்று... இந்திய- பாகிஸ்தான் போர் முடிவுற்ற தினம்

today-in-history

1965-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற போர் இந்தோ- பாகிஸ்தான் போர் என அழைக்கப்படுகிறது. இது இருநாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தால் உருவான இரண்டாவது காஷ்மீர் போர் என அழைக்கப்படுகிறது.

ஜம்மு- காஷ்மீர் பகுதிக்குள் ‘ஜிப்ரால்ட்டர் நடவடிக்கை’ என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானியப் படைகள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இந்நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது போர் தொடங்கியது. மொத்தம் ஐந்து வாரங்கள் நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏனைய இந்திய-பாகிஸ்தான் போர்களைப் போலவே இப்போர் நிலவரங்கள், மற்றும் விவரங்கள் பெருமளவு வெளியில் தெரியவரவில்லை.

1965-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி, பன்னாட்டு எல்லையைக் கடந்து லாகூர் நகரை இந்திய ராணுவத்தினர் அண்டினர். ஒரு மணி நேரத்தில் லாகூரைக் கைப்பற்றுவோம் என இந்தியா அறிவித்தது. அதே நாளில் பாகிஸ்தானின் வான் படையினரின் தாக்குதலில் பத்து இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 10-ஆம் நாளில் இந்தியாவில் அம்ரித்சர் நகரை பாகிஸ்தானின் பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

செப்டம்பர் 22-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதனை அடுத்து சோவியத்தின் தாஷ்கெண்ட் நகரில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப் கானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்குத் திரும்ப அழைக்க முடிவு செய்தனர். இதனையடுத்து இந்திய- பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close