JUST IN
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
 • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
 • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
 • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
 • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
 • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
அறிவியல் & தொழில்நுட்பம் 11 Aug, 2016 05:22 PM

கூகுளின் உபயோகமான சில செல்போன் செயலிகள்

Cinque Terre

இன்றைய மொபைல் போன் உலகத்தில் செயலிகள் (மொபைல் அப்ளிகேஷன்) இல்லாமல் எந்தவொரு மொபைலும் இருப்பதில்லை என்றே கூறலாம்.

அதிலும் உலகின் பெரும்பாலான மொபைல் போன்கள் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கிவருகின்றன. கூகுள் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள

பல செயலிகள் செல்போன்களை ஆக்கிரமித்துள்ளன. ஜிமெயில், மேப் வசதி உள்ளிட்ட பல செயலிகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்திவரும் நிலையில், அதிகம் பிரபலமாகாத

அதேநேரம் உபயோகமான சில செயலிகள் குறித்து காணலாம்.

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் (Android Device Manager):

ஆண்ட்ராய்டு மொபைல் போன் தொலைந்துவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க உதவும் இந்த மொபைல் அப்ளிகேஷன். இந்த ஆப் மூலம் உங்களின் தொலைந்துபோன ஆண்ட்ராய்டு

செல்போனை வேறு ஒரு போனின் உதவியுடன் ஃபார்மேட் செய்வதுடன், அந்த போன் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடிக்கவும் உதவுகிறது.

கூகுள் ஆந்தட்டிகேட்டர் (Google Authenticator):

உங்கள் ஆண்ட்ராய்ட் செல்போனில் உள்ள இ-மெயில் கணக்குகள் மட்டுமல்லாது பல்வேறு சமூக வலைதள கணக்குகளிலும் உள்நுழையும் முன்பாக இந்த மொபைல் ஆப் மூலம் 2

ஆவது முறையாக சரிபார்த்துக் கொள்ளலாம். திருட்டுத்தனமாக ஒருவரின் சமூக வலைதள மற்றும் இ-மெயில் கணக்குகளில் வேறு ஒரு நபர் நுழைவதைத் தடுக்க உதவும்.

கெஸ்டர் சர்ச் (​Gesture Search):

இந்த செயலியின் மூலம் உங்கள் மொபைல் போனில் உள்ள பல்வேறு தகவல்களையும் அதன் முதல் எழுத்தை திரையில் வரைந்து காட்டுவதன் மூலம் மிக எளிதாகத் தேட முடியும்.

ஆர்ட்ஸ் அண்டு கல்ச்சர் (Arts and Culture):

இந்த செயலி மூலம் உலகின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் கலை நயமிக்க படைப்புகள் குறித்த விபரங்களை உங்கள் விரல்நுனியில் அறிந்துகொள்ளலாம்.

இன்பாக்ஸ் (Inbox):

ஜிமெயில் உள்ளிட்ட இமெயில் கணக்குகளைப் பராமரிக்க செயலிகள் இருப்பினும் நமக்கு வரும் இ மெயில்களை மட்டும் தனியாகப் பார்க்கும் வகையில் இந்த செயலி

உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பயண டிக்கெட்டுகள் உள்ளிட்ட முக்கியமான இ மெயில்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads