[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்”- இஸ்ரோ

isro-about-chandrayaan2-mission

தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான்-2 விண்கலத்தின், விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கும் என இந்தியாவே காத்திருந்தது. ஆனால், தரையிறங்க 2.1 கிலோமீட்டர் தொலைவு இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதால் சோகத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95  சதவிகித பணிகளை எட்டிவிட்டோம் என தெரிவித்துள்ள இஸ்ரோ நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி ஆர்பிட்டர் சுற்றிக் கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளது. ஆர்பிட்டரில் உள்ள கருவி மூலம் நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகள் மற்றும் கனிம வளங்களை ஆராய முடியும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.

முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான் 2 திட்டத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரோ, சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து அதன் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்றுநோக்கி கவனித்துக் கொண்டுவந்தன எனக் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close