[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

''இந்தியாவில் அசுர வளர்ச்சியடையும் யூடியூப்: மாதத்துக்கு 265 மில்லியன் பேர் '' - யூடியூப் சிஇஓ

india-becomes-youtube-s-largest-and-fastest-growing-market-says-ceo

யூடியூப் வலைதளம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசன் தெரிவித்துள்ளார்.


சமூக வலைதளங்களில் பிரதானமான ஒன்று யூடியூப் . இந்தத் தளம் வீடியோ பதிவுகள் பார்க்கவும் பதிவிடவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தளத்தில் வீடியோ பதிவிடுவதன் மூலம் வருவாய் ஈட்டமுடியும் என்பதால் இது ஒரு வருமானம் ஈட்டும் தளமாகவும் இருந்துவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யூடியூப் வலைதளம் வேகமாக வளர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஒ சுசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியா தான் தற்போது யூடியூப் தளத்தின் மிகப் பெரிய சந்தை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு இந்தியாவிலிருந்து 265 மில்லியன் பேர் வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் யூடியூப் தளம் பொழுது போக்கு, அரசியல் மற்றும் பிற துறை தகவல்களை எளிதில் தருவதால் அதை அதிக மக்கள் காண்கின்றனர். அதேபோல இந்தியாவில் கடந்த ஓராண்டில் மொபைல் போனில் யூடியூப் தளத்தை பார்ப்பது 85% அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் 1,200 பக்கங்கள் மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து செயல்பட்டு வருகின்றன. இதுகடந்த 5 ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.”எனத் தெரிவித்துள்ளார்.


யூடியூப் தளத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு இந்தியாவில் அதிகரித்திருக்கும் இணையதளம் மற்றும் மொபைல் போன் பயன்பாடு தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close