[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
 • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
அறிவியல் & தொழில்நுட்பம் 06 Jul, 2017 10:09 AM

கடல்தாண்டி அசுர வேகத்தில் வரும் இண்டர்நெட்.. இது ஜியோ ஸ்டைல்!

jio-service-extends-overseas

உலகின் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது.

இது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் 21 கேபிள்களை தரையிறக்கி, 3 கண்டங்களை இணைக்கும் வகையில் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த ஆண்டு அதிரடி சலுகைகளுடன் களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் ஜியோ தொலைத் தொடர்பு சேவை, புதிது புதிதாக பல இலவச சேவைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளார்களை தன்வசம் ஈர்த்தது.

இந்நிலையில், தற்போது இணையச் சேவைக்காக கடல்வழி கேபிள்களை அமைக்க ஜியோ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 40 டெரா பிட்ஸ் அலைவரிசையை பகிர முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களை இணைக்கிறது.

இது 25,000 கி.மீ. தொலைவில் ஏஏஇ-1 என்ற கேபிள் கடலுக்கடியில் செலுத்தப்படவுள்ளது. அனைத்து உலகளாவிய சந்தைகளை நேரடியாக அணுகுவதற்கு பயன்படுவதுடன், மற்ற கேபிள் சாதனங்கள், ஃபைபர் நெட்வொர்க்களுடனும் ஏஏஇ-1 சுலபமாக இணைகிறது. இந்த கேபிள்கள் பிரான்சின் மர்செய்லீயில் இருந்து, ஹாங்காங் வரை தொடர்கிறது. இதற்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஜியோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கேபிள் மூலம் 100 ஜிபிபிஎஸ் அதிவேக இணையச் சேவையை தொடர்ந்து பெறலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிவேக சேவையைக் கொண்டு, அனைத்துவிதமான தகவல் தொடர்புகளையும் அசுர வேகத்தில் பெறலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close