[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி

ஏடிஎம்-க்கு வயது ’50’

50th-anniversary-of-the-atm-opens

பட்டனைத் தட்டினால் பணம் என பல படல் நோட்டுகளை அள்ளித்தரும் ஏடிஎம் இயந்திரம் நடைமுறைக்கு வந்து என்ன ஒரு 10 அல்லது 15 வருடங்கள் தான் ஆகிறது என பலர் நினைப்பது உண்டு. ஆனால் ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகின்றன. ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே ஒரு கெத்து தான் என்ற நிலை மாறி இன்று பாமரர்களும் ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.

ஏடிஎம்-ன் வரலாறு

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜான் ஷெபர்ட் பரோன் தான் முதன் முதலாக ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். லண்டன் என்பீல்ட்டில் முதல் ஏடிஎம் ஜூன் 27, 1967 அன்று வெளிவந்தது. முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு பார்க்லேஸ் வங்கியின் கிளை ஒன்றில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டது. முதன்முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், வவுச்சர் ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.

1939 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ’சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்’ ஒரு இயந்திரத்தை வைத்தது. அதனை ’பேங்கோகிராஃப்’ என்று அழைத்தார்கள். ஆனால் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. அதன்பின் ஜான் ஷெபர்ட் பரோன் வடிவமைத்த ஏடிஎம் இயந்திரம் தான் பணம் எடுக்கும் வசதியுடன் வெளிவந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. முதலில் 6 இலக்க பெர்சனல் பின் நம்பரை கொண்டிருந்தது காலப்போக்கில் 4 இலக்க பின் நம்பராக மாறியது. வெளிநாடுகளில் மட்டும் உலா வந்த ஏடிஎம் கடந்த 15 வருடமாக இந்தியாலும் காலூன்ற ஆரமித்தது. இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்கள் உள்ளன.

ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் என்று அழைக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களில் முன்பெல்லாம் பணம் எடுக்க மட்டும்தான் முடியும் ஆனால் தற்போது பணத்தை அதனிடம் கொடுத்து ட்ரான்சாக்‌ஷன் செய்யவும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மொபைல் தொடர்பான பணப்பரிவர்த்தனைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்திற்கும் தற்போது ஏடிஎம் கார்டுகளே பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மனிதரின் அன்றாட வாழ்வில் இன்றியமையா பொருளாகிவிட்டது ஏடிஎம் இயந்திரங்கள். ஏடிஎம் வந்ததிலிருந்து நாணயங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்றே கூறலாம். ஏடிஎமின் பொன்விழாவை நினைவு கூறும் வகையில் பார்க்லேஸ் வங்கி, என்பீல்ட் கிளையில் தங்க ஏடிஏம் இயந்திரத்தை வைத்து சிறப்பாக நினைவு கூறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close