[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

பஜாஜ் நிறுவனத்தின் 400 சிசி திறன் கொண்ட 'பல்சர் சி.எஸ் 400' பைக்...!

bajaj-introduced-pulsar-cs400

இந்தியாவின் பிரபல பைக் நிறுவனமான பஜாஜ் நிறுவனம் 400 சிசி என்ஜின் திறனுள்ள ‘பல்சர் சி.எஸ் 400’ எனும் பைக்கை அறிமுகபடுத்தியுள்ளது.

அடுத்த மாத இறுதியில் இந்த புதிய மாடல் பைக் சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைக் ஆர்வலர்களுக்கு பல்சர் என்றால் ஒரு அதீத பிரியம் தான். அந்தவகையில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிக என்ஜின் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் விலை 1.5 லட்சத்திலிருந்து 1.6 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்ட் ரக பைக்குகளுக்கு அடுத்ததாக அதிக சிசி திறன் கொண்ட பைக் லிஸ்டில் ‘பல்சர் சி.எஸ் 400’ இடம் பெறுகிறது.

இந்த பைக்கில் பெட்ரோல் நிரப்புமிடம் மற்றும் முகப்பு விளக்கு போன்றவை ‘பல்சர் 200’ பைக்கை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக இந்த பைக்கில் எல்.ஈ.டி முகப்பு விளக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிரபல ரேஸ் பைக்கான கே.டி.எம் பைக்கில் உள்ளது போல திரவ எரிபொருள் குளிர்ச்சி தொழில்நுட்பம், ஒரு சிலிண்டர் இன்ஜின் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கிலும் உள்ளன. இந்த பைக்கில் மொத்தம் ஆறு கியர்கள் உள்ளது. மேலும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close