[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பயணிகளின் உடல்நிலையைக் கண்காணிக்க 'டிஜிட்டல் மாத்திரை'.. பிரிட்டிஷ் ஏர்வேஸின் புது முயற்சி

british-airways-could-serve-passengers-digital-pill-to-monitor-health-conditions

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் கண்காணிக்க ‘டிஜிட்டல் மாத்திரை’-யை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஸ்மார்ட் மாத்திரைகளை ‘ப்ரோடஸ் டிஜிட்டல் ஹெல்த்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஸ்மார்ட் மாத்திரைகளைப் போல உடலில் தோலுக்கடியில் பொருத்தும் நானோ சென்சார்களையும் உருவாக்கியுள்ளது. இவை மாரடைப்பு ஏற்படப் போவதை முன் கூட்டியே தெரிவிக்கும் திறனுடையவையாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close