[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

விரைவில் வரவிருக்கும் மெய்சு புரோ 6எஸ் மாடல் ஸ்மார்ட்போன்...!

meizu-pro-6s-with-3060mah-battery-12-megapixel-camera-launched

மெய்சு நிறுவனத்தின் புரோ 6 எஸ் எனும் புதிய மாடல் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மெய்சு நிறுவனத்தின் புரோ 6 எஸ் ஸ்மார்ட்போனில் கேமரா மற்றும் பேட்டரி ஆயுள் திறன் கூட்டி மேம்பட்ட திறனுடன் வெளிவரவுள்ளது.

மெய்சு புரோ 6எஸ் மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஆட்டோ ஃபோகஸ் தொழிநுட்பத்தில் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா வசதியும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வசதியும் கொண்டு கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியுடன் வடிவமைகப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 26,700 ஆகும்.

சாம்பல், தங்கம், வெள்ளி போன்ற மூன்று வண்ணங்களில் மிக அழகாக வெளிவரவுள்ளது. 5.2 இன்ச் எச்.டி. தொடுதிரையுடன் வெளிவரவுள்ளது. மேலும் 3060மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி தரத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 6 மாடல் போனில் கொடுக்கபட்டுள்ளது போன்று இதிலும் 3D பிரஸ் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது.

5.2-அங்குல வடிவத்தில் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) திறனுடன் புரோ 6 எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள 24W சார்ஜர் வழியாக துரிதமாக சார்ஜ் செய்துகொள்ள இயலும். 10-LED ஃபிளாஷ் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், மற்றும் USB வகை சி இணைப்பு, ப்ளூடூத் 4.1 மற்றும் வைஃபை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் நேர்த்தியாக அமைந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close