மாம்பழங்கள் கெடாமல் இருக்க புதிய நானோ தொழில்நுட்ப முறை கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக நாம் சந்தையில் வாங்கும் மாம்பழங்கள் விரைவில் அழுகி விடும். இதை முறியடிக்கும் வகையில் புதிய நானோ தொழில்நுட்ப முறை அறிமுகபடுத்தபட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தை பின்பற்றினால் பழங்கள் 6 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான மருந்துகள் கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் விரைவில் கெட்டுப் போகும் பழங்கள் எண்ணிக்கையை 15 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் பழங்களின், அளவு, சுவை, தரம் மாறாமல் இருப்பது இம்முறையின் சிறப்பு என்றும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு