[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

சாலை விபத்துகளை தவிர்க்க 'ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்'

new-app-introduced-in-japan

சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளின் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் ஜப்பானில் ‘டிரைவிங் பாரிஸ்டா’ எனும் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில வருடங்களாக சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தீர்வுகாணும் முயற்சியாக ஜப்பானின் டொயோட்டா மற்றும் கொமேடா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘டிரைவிங் பாரிஸ்டா’ என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர்.

இந்த மொபைல் அப்ளிகேஷனைப் போனில் பதிவிறக்கம் செய்து, வாகனம் ஓட்டும்போது போனை ஒருபுறமாக சாய்த்து வைத்துவிட வேண்டும். எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை ஜி.பி.எஸ். கணக்கிட்டுக்கொள்ளும். வாகனம் ஓட்டும் போது செல்போனைப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும்போது தொடர்ச்சியாக 100 கி.மீ. தூரம் செல்போனைப் பார்க்காமல் ஓட்டிவிட்டால், சூடான காபியோ, குளிர்ந்த காபியோ கொமெடா காபி கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய ஆப் குறித்து ‘டொயோட்டோவின் நிர்வாக அதிகாரி ஷுய்சி முரகாமி கூறுகையில், சாலைப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இது என்று தெரிவித்தார். இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்கும்பட்சத்தில், சாலை விபத்துகள் இல்லா பயணத்தை உறுதிப்படுத்தலாம் எனவும் நம்பிக்கை விதைக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close