[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு

thirumavalavan-54th-bithday-celebration

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளனின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெறுகிறது.

திருமாவளவனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ம் தேதி அக்கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் தொல்.திருமாவளனின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமாகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே இன்று காலை அடையாறில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய திருமாவளவன் , மதவாதமும் மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close