[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

 “சூர்யாவின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது” - சீமான்

seeman-speech-about-surya

புதிய கல்வி கொள்கையில் சூர்யா பேசுவதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும் என நாம் தமிழர்கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சூர்யாவின் இந்த பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். 

இந்நிலையில், புதிய கல்வி கொள்கையில் சூர்யா பேசுவதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும் என நாம் தமிழர்கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், “இதில் அரசியல் பார்க்கக்கூடாது. இது அடிப்படை உரிமை. நான் பல ஆண்டுகளாக பேசி வந்ததையே சூர்யா பேசியுள்ளார். அவர் பேசுவதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும். அவரின் துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும்போது சூர்யா தைரியமாக பேசியுள்ளார். கல்வி என்பது மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அவர் கேட்கும் கேள்விகளில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

இன்று சமமான கல்வி இல்லை. கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். அது சமச்சீர் பாடத்திட்டம்தான். சமச்சீர் கல்வி முறை இல்லை. நான் ஓராசிரியர் பள்ளியில் படித்தவன்தான். நகர் புறங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் படிக்கும் மாணவரும் நகர்புறங்களில் படிக்கும் மாணவரும் ஒரே தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது வாய்ப்பில்லை. இது எவ்வாறு சமவாய்ப்பாக அமையும். இதைத்தான் சூர்யா சொல்கிறார். புதிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close