[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

“அடுத்தக்கட்ட நகர்வு என்ன?” மாயாவதியுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை

prepping-for-next-step-says-akhilesh-yadav-after-meeting-mayawati

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், மாயாவதியை அகிலேஷ் யாதவ் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 கட்டங்களாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. வாக்குப் பதிவுக்கு பின் தேசிய ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சுமார் 300 இடங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. இதில், 80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக 40 இடங்களுக்கு மேல் பிடிக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக கடந்த முறை இங்கு 71 தொகுதிகளை கைப்பற்றியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாயாவதி, சமாஜ்வாடி கூட்டணிக்கு 30 இடங்கள் வரைதான் கிடைக்கும் எனக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. 

         

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று சந்தித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. லக்னோவில் உள்ள மாயாவதியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

இந்தச் சந்திப்புக்கு பின்னர் பேசிய அகிலேஷ் யாதவ், அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்ததாக தெரிவித்தார். மேலும். “மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பேசுவோம். உத்தரப்பிரதேசத்தில் 56 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும், சமாஜ்வாடி 37 இடங்களிலும் போட்டியிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு  தொகுதிகளை ஒதுக்கீடு செய்தன. 

           

அத்துடன், “தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், மம்தா பானர்ஜி மற்றும் சரத் பவாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவுள்ளோம். அதேபோல், காங்கிரஸ் கட்சியுடன் 24ம் தேதி பேசுவோம்” என அவர் கூறியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள தலைவர்களை நாளை சந்திக்கவுள்ளனர். காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள கூட்டணியில் மாயாவதி பங்கேற்கமாட்டார் என அக்கட்சியின் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close