[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு

thirumavalavan-petition-in-the-high-court-demanding-protection

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இரண்டு தொகுதிகளை பெற்றுள்ள விசிக, சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து அவர் களம் காணுகிறார். 

திமுக கூட்டணியில் இருந்தாலும், தங்கள் கட்சியின் தனித்துத்தை நிலைநிறுத்த சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக மோதிரச் சின்னத்தை அவர்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தது. ஆனால், அந்தச் சின்னம் வழங்கப்படவில்லை. 

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதற்கு பானைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மோதிரம், வைரம், பலாப்பழம் ஆகிய சின்னங்களை விசிக கோரியிருந்த நிலையில், பானைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. 

இதனிடையே விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதால் நிரந்தர பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் 2016 ஆம் ஆண்டு முதலே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது எனவும் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.  திருமாவளவன் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close