[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“காங். தலைவர்களால் காமராஜர் அவமானப்படுத்தப்பட்டார்” - பிரதமர் மோடி பேச்சு

congress-and-its-allies-cannot-fulfill-regional-aspirations-because-their-decisions-are-guided-by-the-concept-of-family-first-pm-narendra-modi-in-kancheepuram-tamil-nadu

டெல்லி காங்கிரஸ் தலைவர்களால் காமராஜர் அவமானப்படுத்தப்பட்டதை மறக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சுமார் 30 நிமிடங்கள் பேசினார். இன்றைய பேச்சின் போது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரையும் தொட்டு பேசினார். 

காமரஜரைப் பற்றி பேசும் போது, “சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்ததால் காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது. மாநிலங்களின் விருப்பங்களை முந்தைய காங்கிரஸ் அரசு புறம் தள்ளியது. வலிமையான மாநில தலைவர்களை காங்கிரஸ் விரும்பியதில்லை” என்று காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். 

                    

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை குறித்து பேசுகையில், “எதிர்க்கட்சிகள் என்னை திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். என்னைப் பற்றிய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுகிறேன். நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன; வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை” என்றார்.

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே, ‘உங்களுக்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று மோடி பேசினார். அத்தோடு, நாளை நமதே..நாற்பதும் நமதே என்பது கூறி மோடி தனது பேச்சினை முடித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close