[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காங். அல்லாமல் ம.பி, உத்தரகாண்டில் போட்டி : அகிலேஷ்-மாயாவதி அறிவிப்பு

bsp-sp-announce-alliance-in-uttarakhand-and-madhya-pradesh-for-2019-polls

2019 மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்டிற்கான தொகுதி பங்கீட்டை பகுஜன் சமாஜ் - சமாஜ்வடி கூட்டாக அறிவித்துள்ளது. 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அமையும் கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், காங்கிரஸ் கட்சியை தவிர்த்துவிட்டு உத்தரப் பிரதேசத்தில் தங்கள் கூட்டணியை சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் அறிவித்தது. 

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்திற்கான தொகுதி பங்கீட்டையும் அகிலேஷ் - மாயாவதி கூட்டாக அறிவித்தனர். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தனர். தங்களுடைய கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தாள் கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கி இருந்தன. 

         

இந்நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி அறிவித்துள்ளன. மாயாவதி, அகிலேஷ் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அறிவித்தனர். மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 26, சமாஜ்வாடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல், உத்தரகாண்டில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் சமாஜ் வாடி ஒரு தொகுதியிலும், பகுஜன் சமாஜ் மீதமுள்ள 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close