[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

விஜயகாந்தை சந்திக்கிறார் திருநாவுக்கரசர் ! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

congress-thriunavukkarasar-to-meet-vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் 2 கட்சிகளும் அதற்குப் பின் நடைபெற இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பார்கள் என கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக 10 தொகுதிகளை கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனை ஏற்க மறுக்கும் அதிமுக, 10 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கும்பட்சத்தில், தேமுதிக வேட்பாளர்களும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரது இல்லத்தில் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தான் அவரது இல்லத்திற்கு திருநாவுக்கரசர் செல்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close