[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

“அரசியல் ஆபத்தான விளையாட்டு; தேசத்திற்கு நல்லது நினைக்கிறார் மோடி..”- மனம் திறந்த ரஜினி..!

politics-is-a-dangerous-game-rajinikanth

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இதே டிசம்பர் மாதத்தில் தான் தனது அரசியல் பயண அறிவிப்பை ரடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்திருந்தாலும் கூட இதுவரை கட்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகி உள்ள 2.0 திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ‘இந்தியா டுடே’வுக்கு அவரது இல்லமான போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

“படங்களில் காமெடி காட்சிகள் பிடிக்கும். காமெடி காட்சிகளில் நடிப்பதிலும் எனக்கு சிரமம் இல்லை. செட்டிற்கு செல்லும் போது அன்று காமெடி காட்சிகள் படமாக்கப்பட இருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்து விடுவேன். மற்றவர்களை சிரிக்கை வைப்பது என்பது அவ்வளவு கடினமான ஒன்று. டைமிங் காமெடியும் மிகவும் சவாலான ஒன்று.

நடிக்க வந்த புதிதில் நான் சிவாஜி கணேசன் போன்று டயலாக் டெலிவரியை பின்பற்றினேன். ஆனால் இது எல்லாம் பாலசந்தருடன் வேலை செய்யும் முன்புவரை தான். அவர் முழுமையாக என்னை மாற்றினார். நான் எது செய்தாலும் சற்று வேகமாக செய்வேன். அவர் என்னிடம் இருக்கும் வேகத்தை கண்டுபிடித்தார். அதையே பின்பற்று என்று அறிவுறுத்தினார். அது என் உன் பாணி.. உன் அடையாளம் என்றார். அப்படித்தான் என் ஸ்டைல் வந்தது.

அரசியல் தளம் வேறு. சினிமா தளம் வேறு. பொழுதுபோக்கிற்கான விஷயங்களில் அரசியலை கொண்டுவரக் கூடாது. இருப்பினும் ஒரு சில படங்களில் சில அரசியல் சார்ந்த டயலாக் இருக்கும். அது வேண்டுமென்ற கொண்டுவரப்பட்டது அல்ல.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர நினைக்கும் யாருக்கும் எம்ஜிஆர் ஒர ரோல் மாடல். உதவும் குணம் அவருக்கு இயல்பாகவே இருந்தது. என்னதான் சொன்னாலும் ஜெயலலிதா ஒரு சிறந்த பெண். அவரின் தன்னம்பிக்கை. உறுதியை பாராட்டியே ஆக வேண்டும். ஆண்கள் நிறைந்த அரசியல் உலகில் தனி ஒரு பெண்ணாக தனித்து நின்றவர்.

கமல்ஹாசனை என் அரசியல் போட்டியாளராக கருதவில்லை. அவர் ஒரு நல்ல நண்பர். சக நடிகர். இப்போதும் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கிறார்.

பிரதமர் மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காக கடினமாக முயற்சிக்கிறார். சிறந்தவற்றை செய்ய முயற்சிக்கிறார். நான் இன்னும் முழுமையான அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை. ஆனால் அரசியல் என்பது மிகவும் சவாலான ஒன்று. மலர்கள் நிறைந்த பாதையில்லை. அத்துடன் ஆபத்தான விளையாட்டு மற்றும் நாடகம் நிறைந்தது. அதில் கவனமுடம் விளையாட வேண்டும். நேரம் மிக முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close