[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

“நியூட்ரினோவுக்கு எதிராக பலமான வாதங்களை தமிழக அரசு வைக்கவில்லை” - டிடிவி தினகரன்

ttv-dinakaran-said-the-tamil-nadu-government-did-not-put-up-strong-arguments

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தாலும் இத்திட்டத்திற்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிப்பதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

அந்த வழக்கின் இறுதி தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகவேந்திர ராத்தோர் தலைமையிலான அமர்வு இன்று வழங்கியது. 

அதில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சூழல்துறை அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க முடியாது எனவும் தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்தால் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் உத்தரவில் தெரிவித்தனர். 

இதற்கு பூவுலகின் நண்பர்கள் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில்,  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தாலும் இத்திட்டத்திற்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிப்பதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு பலமான வாதங்களை முன்வைக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுவதாகவும் இவ்வழக்கின் மேல்முறையீட்டிலாவது நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close