[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக போட்டி ? அமைச்சர் பதில்

state-unit-will-decide-about-contesting-in-thirupparankundram-bypoll

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். குழித்துறை தாமிரபரணி ஆற்றில் படித்த்துறை திறப்பு விழா துவக்கி வைக்க வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தொடர்ந்து செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார் அப்போது குமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி. மிகவும் புனிதமானது. தனது மூதாதையர்கள் நற்கதி அடைவதற்காக ஆடி அமாவாச நாளில் ஆற்றில் தற்பணம் கொடுப்பது தலைமுறையாக நடக்கிறது. 25 லட்சம் ரூபாயில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது இங்கு . பூத்துறை தூண்டில்வளைவுக்காக 15 கோடி ரூபாய் நபார்டு வங்கி நிதி. தடுப்பணைக்காக 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த அனிஷ் இளைஞர் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு. கேரள காவல்துறை கொடுமையால் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். முறையாக பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. அவன் எதற்காக கைது செய்யப்பட்டார். எப்படி கொடுமைபடுத்தப்பட்டார் என விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர் “சிலை கடத்தல் காவல்துறை அதிகாரி மாணிக்கவேல் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகிறார். பழைமையான சிலைகளை கொண்டுவந்தார். சி.பி.ஐ. விசாரணை குறித்து  மத்திய அரசுதான் முடிவு செய்யும். திருப்பரங்குன்றம் இடை தேர்தலில் நிற்பது மாநில தலைமை முடிவு செய்யும். கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவருவது நல்லது. ஓ.பி.எஸ். உறவினருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது மனிதாபிமானம் அடிப்படையிலானது. தேனி குரங்கணியில் தீயில் சிக்கியவர்களுக்காக உடனடியான உதவிகளை ராணுவ அமைச்சர் செய்தார். அவர் பார்வைக்கு கட்டாயம் எனப்பட்டதால் உதவி செய்திருக்கிறார். முதல்வரை சந்தித்து ரப்பர் உற்பத்தி, சமூக காடுகள் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளேன். நம் நாட்டின் தேவைக்குதக்கப்படி ரப்பர் உற்பத்தி செய்யவில்லை. நம் விளைச்சலுக்கு அதிகமாக இருக்கும்போது இறக்குமதி செய்துதான் ஆகவேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய பொன்.இராதாகிருஷ்ணன் குமரியை சுற்றுலா மாவட்டமாக கொண்டுவருவதாக தெரிவித்தார். கட்டுமானப்பணிகள் முக்கியம். சாலை போக்குவரத்து உள்ளிட்டவைகளில் தன்னிறைவுபெற்றவர்களாக மாற வேண்டும். சுற்றுலாப்பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நாம் செய்ய வேண்டும். விமான நிலையத்திற்கு நம் மாவட்டத்தின் இடம் தகுதியானது இல்லை என கூறுகிறார்கள். அதுபற்றியும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வோம். சாய் சப்செண்டருக்கு குறைந்தது 50 ஏக்கர் நிலம் தேவை. தமிழகத்தில் எங்காவது கொண்டுவரவோண்டும். வருமானவரு செலுத்துவது அனைவரது கடமை. அப்படி செலுத்துபவர்களுக்கு எந்த பயமும் இல்லை. ரயில் நீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியின்போது அவர் தெரிவித்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close