[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் ஊழலில் மூழ்கடித்துவிட்டது: பியூஷ் கோயல்

dmk-admk-involving-corruption-piyush-goyal

தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் ஊழலில் மூழ்கடித்துவிட்டதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.என். ராஜாவுக்கு ஆதரவாக கோயல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசு குறைந்த விலையில் நிலக்கரி மற்றும் எல்இடி பல்புகளை வழங்க முன்வந்தபோது அதனை தமிழக அரசு ஏற்கவில்லை எனக் குறை கூறினார். இதன் மூலம், சுமார் 400 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்ற போதிலும், பிரதமர் மோடி ஓடிவந்து உதவியதை நினைவுகூர்ந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close