[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

cm-palanisamy-goes-to-delhi-today

நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம், தேசிய சத்துணவு திட்டம், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய இந்தியா 2022-க்கான வளர்ச்சி திட்டமும் இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். அப்போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசவும் முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமரான பின்பு, மத்திய திட்டக் கமிஷன் மாற்றப்பட்டு அதற்கு பதில் நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த அமைப்பில் மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close